இங்கிலாந்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – ஐவர் கைது
பயங்கரவாதம் மற்றும் வெடிகுண்டு குற்றங்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துபேர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் அமெரிக்காவின் நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தும் இங்கிலாந்தின் விமானப்படைத் தளம் அருகே கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.
இராணுவ வெடிகுண்டு அகற்றும் பிரிவுகள் சம்பவ இடத்தில் உள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பல வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவுக்குப் பிறகு அப்பகுதி மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை, மேலும் சாத்தியமான நோக்கம் குறித்தும் எந்தத் துப்பும் வழங்கப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





