இலங்கை

திருகோணமலை கோட்பே துறைமுகத்தை நவீன மயமாக்கல் திட்டம்

  • August 3, 2026
  • 0 Comments

திருகோணமலை கோட்பே மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்கி மேம்படுத்தும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (03) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான விரிவான வரைபடங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்தவுடன், அவை அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

கிழக்கு ஆளுநர் மற்றும் கிழக்கு கடற்படை தளபதி சந்திப்பு

  • August 3, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவிற்கும், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த ஜூலை 24ம் திகதி திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு தளபதியாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

உலகம்

டென்மார்கில் 1600 பேர் கட்டாய இராணுவ சேவையில் இணைவு

  • August 3, 2026
  • 0 Comments

டென்மார்க்கில் கட்டாய இராணுவ சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் இன்றைய தினம் சுமார் 1600 இராணுவ வீரர்கள் பணிகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் 11 மாத கால சேவைக் காலத்தைத் தொடங்குகிறார்கள். 2024-ல், முதல் முறையாகப் பெண்களையும் உள்ளடக்கி கட்டாய இராணுவ சேவையை நீட்டிப்பதாகவும், வழக்கமான சேவைக் காலத்தை நான்கு மாதங்களிலிருந்து 11 மாதங்களாக அதிகரிப்பதாகவும் டென்மார்க் கூறியது. அதே நேரத்தில், கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுபவர்களின் எண்ணிக்கை 2033 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 5,000-லிருந்து 7,500 ஆக […]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரீட் (Writ) மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவின் தலைவிதி செப்டம்பர் 22 இல் நிர்ணயம்

  • August 3, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரீட் (Writ) மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதியை  நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்த மனுவை மேற்கொண்டு விசாரிப்பதா அல்லது ஆரம்பத்திலேயே நிராகரிப்பதா என்பது குறித்த உத்தரவை நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்கும். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த […]

காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

காசாவில் தொடரும் அவலம்: செத்து மடியும் மக்கள்

  • August 3, 2026
  • 0 Comments

காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாகப் பதிவான 18 இறப்புகளும், ஏற்கனவே காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததும் இந்த எண்ணிக்கையில் அடங்கும் என அமைச்சகம் கூறியுள்ளது. அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இஸ்ரேலுடன் “போர்நிறுத்தம்” தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1,250 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4,110 பேர் […]

இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு இயற்றப்படும்: தமிழ் பேசும் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி

  • August 3, 2026
  • 0 Comments

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் […]

இலங்கை

கொட்டகல மற்றும் கினிகத்தேன பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள் மீட்பு

  • August 3, 2026
  • 0 Comments

கொட்டகல மற்றும் கினிகத்தேன பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த குடும்பத்தினர் இன்று பிற்பகல் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கிப் பாயும் ஹட்டன் ஓயா ஆறு கரைபுரண்டு ஓடியதால், இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட அவசரகால மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில், எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. செய்தி

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்

  • August 3, 2026
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில், எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி ஊடாகச் சென்ற பொதுமக்கள், குளக்கரைக்கு அருகில் சடலம் ஒன்று தீயில் கருகிய நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பேரில் துரிதமாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் இதுவரை […]

பன்னாட்டுக் குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரபல எழுத்தாளர் மாயன்

  • August 3, 2026
  • 0 Comments

பன்னாட்டுக் குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 04.08.2026 அன்று கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு நீர்கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இனப்படுகொலை தொடர்பாக அவர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இரு மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

  • August 3, 2026
  • 0 Comments

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மீள ஆரம்பமாகும் திகதி , உரிய மீளாய்வுகளின் பின்னர் நாளை மதியம் அறிவிக்கப்படும் என்று கல்வி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளது. அதேவேளை, சீரற்ற காலநிலையால் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.