இரு மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை
அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மீள ஆரம்பமாகும் திகதி , உரிய மீளாய்வுகளின் பின்னர் நாளை மதியம் அறிவிக்கப்படும் என்று கல்வி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




