காசாவில் தொடரும் அவலம்: செத்து மடியும் மக்கள்
காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாகப் பதிவான 18 இறப்புகளும், ஏற்கனவே காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததும் இந்த எண்ணிக்கையில் அடங்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.
அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இஸ்ரேலுடன் “போர்நிறுத்தம்” தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1,250 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4,110 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இந்த இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73,375 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தோரின் எண்ணிக்கை 174,220 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




