திருகோணமலை கோட்பே துறைமுகத்தை நவீன மயமாக்கல் திட்டம்
திருகோணமலை கோட்பே மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்கி மேம்படுத்தும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (03) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான விரிவான வரைபடங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பணிகள் நிறைவடைந்தவுடன், அவை அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





