தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. செய்தி பொழுதுபோக்கு

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

  • August 5, 2026
  • 0 Comments

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர், பிவாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். பிரதீப் ராவத்தின் மேனேஜர் சித்தார்த் திவாரி இந்த துயரமான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிரதீப் ராவத் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக […]

ஐரோப்பா

லண்டனின் தேம்ஸ் நதியில் இருந்து சிறுவன் ஒருவனின் உடல் மீட்பு

  • August 4, 2026
  • 0 Comments

லண்டனின் தேம்ஸ் நதியில் இறங்கிய 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாலை 06.50 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரவு 10.50 மணிக்கு சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் மரணம் எதிர்பாராதது, ஆனால் சந்தேகத்திற்குரியது அல்ல என பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திறந்தவெளி நீரில் உள்ள கடுமையான ஆபத்துகளை நினைவில் கொள்ளுமாறு துப்பறியும் கண்காணிப்பாளர் ஆலிவர் ரிக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், மக்கள் […]

இலங்கை

தென் மாகாணம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை

  • August 4, 2026
  • 0 Comments

தென் மாகாணம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து வலுப்படுத்துவதற்காக, தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மனவாடு அவர்களின் தலைமையில் ஒரு அவசரகாலப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நிலைமை குறித்த உளவுத்துறை அறிக்கைகளைத் தொடர்ந்து இக்கூட்டம் கூட்டப்பட்டது. இதன்போது, ​​நீர்கொழும்பு மற்றும் மஹர  சிறைச்சாலைகளில் சமீபத்தில் பதிவான சம்பவங்களைப் போலவே, தென் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அமைதியின்மையைத் தூண்டுவதற்கான சாத்தியமான முயற்சிகளைக் குறிக்கும் உளவுத்துறைத் தகவல்களை அதிகாரிகள் […]

உலகம்

குவாத்தமாலாவில் வெடிக்கும் தருவாயில் எரிமலை- ஆரஞ்சு எச்சரிக்கை

  • August 4, 2026
  • 0 Comments

குவாத்தமாலாவில் (Guatemalan) ஃபியூகோ (Fuego) எரிமலை சாம்பலை கக்கி வருகின்ற நிலையில், அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சான் ஜுவான் அலோட்டெனாங்கோ (San Juan Alotenango) நகராட்சியில் உள்ள எல் போர்வெனீர் ( El Porvenir) மற்றும் லாஸ் லஜிடாஸ் ( Las Lajitas) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலைச் செயல்பாடு தீவிரமடைந்தால், இந்த ஓட்டங்கள் மேலும் விரிவடையும்  என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் எரிமலைக்கு மேற்கு […]

உலகம்

பெட்ரோல் விலை அதிகரிப்பு – எண்ணெய் நிறுவனங்களை சாடிய ட்ரம்ப்

  • August 4, 2026
  • 0 Comments

எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை அதிகரிப்பதன் மூலம் அதிகளவு பணம் சம்பாதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எக்ஸான்மொபில் (ExxonMobilஷ) மற்றும் செவ்ரான்  (Chevron) ஆகிய முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்நிறுவனங்கள் நுகர்வோர் செலவுகளைக் குறைப்பதன் மூலம் “அதில் ஒரு பகுதியை பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். ஈரானில் நடந்து வரும் மோதலே இதற்குக் காரணம் என்று ட்ரம்ப் சாடியுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள […]

உலகம்

காலநிலை மாற்றம் – ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் மலேரியா நோய் தொற்று

  • August 4, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஆப்பிரிக்காவில் வாழும் பெரும்பாலான மக்கள் மலேரியா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில் மலேரியா பாதிப்புகள் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலையால் மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் பரவல், தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் குளிர்ச்சியான பகுதிகளுக்கும் விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கென்யா மற்றும் எத்தியோப்பியாவின் சில […]

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்தியஸ்தர்கள் முன்னேற்றம் கண்டு வருவதாக கத்தார் செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமைதி பேச்சு வெற்றியை நோக்கி: கத்தார் தகவல்

  • August 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்தியஸ்தர்கள் முன்னேற்றம் கண்டு வருவதாக கத்தார் செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்துள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. கத்தாரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 2 சதவீதத்திற்கும் அதிகமாகக் சரிந்தது. முற்றுகையிடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கடல்சார் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வாட்ஸ்அபில் (WhatsApp) திடீரென ஏற்பட்ட சிக்கல் – பலரின் கணக்குகள் முடக்கம்

  • August 4, 2026
  • 0 Comments

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் பலர், எந்த விளக்கமும் இன்றி, தங்கள் கணக்குகள் மர்மமான முறையில் நீக்கப்பட்டதாகவோ அல்லது முடக்கப்பட்டதாகவோ தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு, சேவை விதிமுறைகளுக்கு இணங்குவதற்காக அவர்களின் கணக்குச் செயல்பாடு மதிப்பாய்வு செய்யப்படுகிறது என்றும், 24 மணி நேரத்திற்குள் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிவிப்பொன்று  அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சில நேரங்களில் தாங்கள் தவறாகக் கணக்குகளைத் தடை செய்வதை வாட்ஸ்அப் ஒப்புக்கொள்கிறது, ஆனால் தவறான பயன்பாடு, ஸ்பேம், மோசடிகள் அல்லது பாதுகாப்பு அபாயங்களைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் […]

இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட காற்றழுத்த பிரச்சினை – 10 பயணிகள் காயம்

  • August 4, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து இந்தியாவின் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) ஒன்று தரையிறங்கும்போது கடுமையான காற்றழுத்தச் சீர்குலைவை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் காரணமாக சில பயணிகள் லேசான காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் விமானம் டெல்லியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு விமானப் பணியாளர்கள் மற்றும் பத்து பயணிகள் உட்பட பலருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் […]

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி

இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; 8 பேர் பலி

  • August 4, 2026
  • 0 Comments

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். மேலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3,538 பேர் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 6 மரணங்கள் […]