நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார்: ஈரான் ஜனாதிபதி உருக்கம்
ஈரான் தலைமைத்துவம் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் ஈரான் மக்கள் இறுதிவரை உறுதுணையாக நிற்பார்கள் என்று ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.
போரிடுவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் இராணுவத் தளபதிகளுக்கே உள்ளதாகவும், அவர்களின் ஆற்றலை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்காகத் தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் என்று கூறியுள்ள அவர், படுகொலைகளுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் ஜனாதிபதிக்கும், உச்ச தலைவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.





