இந்தியா

இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 08 பேர் உயிரிழப்பு

வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிலிருந்து சுமார் 393 கி.மீ வடக்கே உள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் இன்று காலை  விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 18 பேர் பயணம் செய்ததாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக 185 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே