உலகம்

சவுதியின் ஜசான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து

சவூதி அரேபியாவில் உள்ள அராம்கோவின் ஜசான் சுத்திகரிப்பு ஆலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சவூதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சம்பவத்தைக் கையாள்வதற்கான நடைமுறைகளை முடித்து வருவதாகவும் எரிசக்தி அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை அது குறிப்பிடவில்லை.

ஜசான் சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 400,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து, பெட்ரோல் மற்றும் அல்ட்ரா-லைட் சல்பர் டீசல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்