இந்தோனேசியாவின் புரோமோ மலை தேசியப் பூங்கா காலவரையறையின்றி மூடப்படுகிறது
கிழக்கு ஜாவாவில் உள்ள புரோமோ மலை தேசியப் பூங்காவை ( Bromo national park) மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ பரவலானது எரிமலை நோக்கி விரிவடைந்ததே பூங்காவை மூடக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூடல் ஆகஸ்ட் 8 மாலை முதல் காலவரையறையின்றி அமலுக்கு வந்துள்ளது என்று பூங்கா நிர்வாகி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பைப் பேணுவதகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.




