வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி – மொஜ்தபா காமேனியின் காணொளி வெளியீடு
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஆரோக்கியத்துடுன் இருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஈரானின் மெஹர் (Mehr) செய்து நிறுவனம் வெளியிட்டுள்ள குறித்த காணொளியில் மொஜ்தபா காமேனி மதம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும் இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
உச்சத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மொஜ்தபா கமேனி இடம்பெற்று வெளியாகியுள்ள முதல் வீடியோ இதுவாகும்.





