ஐரோப்பா

லாட்வியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோன் – நேட்டோ தீவிர கண்காணிப்பு

  • August 14, 2026
  • 0 Comments

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான லாட்வியாவின் வான்வெளிக்குள் இன்று அதிகாலை ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. நேட்டோவின் வான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானங்கள் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அந்த ட்ரோன் அல்லது அதன் தோற்றம் குறித்த விவரங்களை லாட்வியாவின் ஆயுதப் படைகள் உடனடியாக வெளியிடவில்லை. அதேநேரம் ரஷ்யாவுக்கு அருகிலுள்ள பிராந்தியங்களுக்கான வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கையையும் ஆயுதப் படைகள் நீக்கியுள்ளன. ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு ஐரோப்பிய […]

ஈரான் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது காலவரையற்ற கடற்படை முற்றுகையைத் தொடரப்போவதாகவும், பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போர்நிறுத்தப் பேச்சு முடக்கம்: ஈரான்மீது வரலாறு காணாத பொருளாதாரத் தடை

  • August 14, 2026
  • 0 Comments

ஈரான் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது காலவரையற்ற கடற்படை முற்றுகையைத் தொடரப்போவதாகவும், பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த முட்டுக்கட்டைக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து குறைந்து வருவதோடு, பிராந்திய பதற்றமும் அதிகரித்துள்ளது. கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, ஈரானும் ஹோர்முஸ்நீரிணை பகுதியில் முற்றுகையை அமல்படுத்தி வருகிறது. மேலும், அவ்வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க விரும்புவதாகவும் அறிவித்துள்ளது. போருக்கு முன்னர் […]

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் கோரி வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம்

  • August 14, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் கோரி வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்​பாக அவர் எழு​திய கடிதத்​தில், ” ஆகஸ்ட் 12 இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கிடையில் அவசர தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள்: ட்ரம்பிடம் அவசர கோரிக்கை

  • August 14, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கிடையில் அவசர தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அண்மையில் அறிவித்த பரவலான வரி உயர்விலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் உறுதியளித்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசி தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரானிய பெண் கால்பந்து வீராங்கனைகளின் எதிர்காலம் குறித்து நள்ளிரவில் இரு தலைவர்களும் […]

ஐரோப்பா செய்தி

அல்மேரியா விமான நிலையத்தை மூட நடவடிக்கை

  • August 14, 2026
  • 0 Comments

அண்டலூசியாவில் உள்ள அல்மேரியா விமான நிலையம், முக்கிய ஓடுபாதை மேம்பாட்டுப் பணிகளுக்காக, 06 நாட்களுக்கு மூடப்படவுள்ளது. இந்த மூடல் காலத்தில், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படும், மறுதிட்டமிடப்படும் அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புனரமைப்பு காலத்தில், இரவு 10.45 மணி முதல் காலை 7.10 மணி வரை பணிகள் நடைபெறுவதால், மேலும் இடையூறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

" மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் நோக்கிலேயே அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் சட்ட வியாக்கியானத்திற்கு அமையவே நாடாளுமன்றம் செயல்படும்" இலங்கை செய்தி

உயர்நீதிமன்ற வழிகாட்டலுக்கமைய செயல்படுவோம்: அரசு உறுதி

  • August 14, 2026
  • 0 Comments

” மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் நோக்கிலேயே அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் சட்ட வியாக்கியானத்திற்கு அமையவே நாடாளுமன்றம் செயல்படும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று மேலும் கூறுகையில்: “நாட்டில் நீண்டகாலமாகக் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த இரு தேர்தல்களின்போதும் நாட்டு மக்களுக்கு நாங்கள் உறுதியளித்திருந்தோம். அதற்கு அமைவாகவே தற்போது […]

"அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலமானது நாட்டிற்குக் கருப்புப் புள்ளியை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்" என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு நல்லதல்ல – சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் போர்க்கொடி

  • August 14, 2026
  • 0 Comments

“அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலமானது நாட்டிற்குக் கருப்புப் புள்ளியை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார். நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பாகப் பரந்த அளவிலான கலந்தாய்வுகள் மற்றும் விவாதங்கள் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் அவசரமாக முடிவெடுப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்றும் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் என்பது தற்போதைய சூழலில் […]

உலகம்

பாலி தீவு அருகே தீப்பற்றி எரிந்த படகு – உயிருக்கு பயந்து கடலில் குதித்த பயணிகள்

  • August 13, 2026
  • 0 Comments

பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பாலியில் இருந்து அண்டை தீவான லோம்போக் நோக்கிப் புறப்பட்டுச் சென்றபோது நேற்று நள்ளிரவில் தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது, குறித்த படகில் 211 பேர் பயணித்த நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசியப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேரைத் தேடும் பனி தீவீரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் குறித்த படகில், 44 வாகனங்களும் 53 மோட்டார் சைக்கிள்களும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பொருளாதாரம் – ஜுன் மாதத்தில் எதிர்பாராத வளர்ச்சி

  • August 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜூன் மாதத்தில்  எதிர்பாராத விதமாக வளர்ச்சி கண்டதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3% உயர்ந்ததாகவும் அதிகாரப்பூர்வ தரவுகள்  தெரிவித்துள்ளன. ஜூன் மாத இறுதி வரையிலான மூன்று மாதங்களைக் கொண்ட இரண்டாவது காலாண்டில், பொருளாதாரம் 0.4% வளர்ச்சி கண்டதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. இருப்பினும் பொருளாதார வல்லுநர்கள், மே மாதத்துடன் ஒப்பிடுகையில் மாதாந்திர அடிப்படையில் வளர்ச்சி இருக்காது என்று கணித்திருந்தனர். இதற்கிடையே பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம், “சவாலான நிதி நிலைமையின் […]

"நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால் எனது பதவி பறிபோனாலும்கூட அதனை மனப்பூர்வமாக ஏற்று விலகத் தயார்" என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

மாற்றத்தை ஏற்படுத்துவேன்: பதவி பறிபோனால்கூட கவலையில்லை – அநுர

  • August 13, 2026
  • 0 Comments

“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால் எனது பதவி பறிபோனாலும்கூட அதனை மனப்பூர்வமாக ஏற்று விலகத் தயார்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு […]