உலகம்

பாலி தீவு அருகே தீப்பற்றி எரிந்த படகு – உயிருக்கு பயந்து கடலில் குதித்த பயணிகள்

பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பாலியில் இருந்து அண்டை தீவான லோம்போக் நோக்கிப் புறப்பட்டுச் சென்றபோது நேற்று நள்ளிரவில் தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது,

குறித்த படகில் 211 பேர் பயணித்த நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசியப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேரைத் தேடும் பனி தீவீரமாக நடைபெற்று வருகிறது.

அதேநேரம் குறித்த படகில், 44 வாகனங்களும் 53 மோட்டார் சைக்கிள்களும் அதில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் மற்றும் 6 கப்பல்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்