காசா பகுதி முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பேணத் தேவையான வசதிகள் இன்றித் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

காசாவில் தண்ணீர் பஞ்சம்: லட்சக்கணக்கானோர் பரிதவிப்பு

  • August 13, 2026
  • 0 Comments

காசா பகுதி முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பேணத் தேவையான வசதிகள் இன்றித் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. காசாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியிற்கும் மேற்பட்டோர், அதாவது 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், குடிப்பதற்கும் , சமைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 6 லிட்டருக்கும் (1.6 கேலன்) குறைவான நீரையே பெற முடிகிறது. அவசரகாலச் சூழல்களில் குடிப்பது, கழுவுவது மற்றும் […]

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான 'பசிஜ்' (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam Hossein Taeb) தெரிவித்துள்ளார். செய்தி

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது: ஈரான் திட்டவட்டம்

  • August 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam Hossein Taeb) தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. “ஹோர்முஸ் நீரிணையானது இன்று இஸ்லாமியக் குடியரசின் (ஈரான்) மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை பார்க்கிறீர்கள். நமது நாடு முழுமையான பாதுகாப்புடன் தன் பாதையில் தொடர்ந்து செல்கிறது” […]

UN Special Rapporteur concerned over proposed increase in judges’ retirement age இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஐ.நா. அறிக்கையாளர் அதிருப்தி

  • August 13, 2026
  • 0 Comments

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குரிய அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் , நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான ஐ.நாவின்சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) கவலை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு கடந்த 07 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தம், அதன் தற்போதைய வடிவம் மற்றும் தாக்கங்களின் அடிப்படையில், நீதித்துறை சுதந்திரம் மற்றும் […]

உலகம்

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை – அமெரிக்காவுடன் கைக்கோர்க்கும் கொலம்பியா

  • August 13, 2026
  • 0 Comments

போதைப் பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கையில் கைக்கோர்க்க கொலம்பியா அரசாங்கம் முன்வந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் நேற்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். “போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் கொலம்பியாவுடன் இணையுமாறு பென்டகனிடம் பொகோட்டா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத மற்றும் தீவிரவாத வலையமைப்புகளை அழிப்பதற்கான கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்குமாறும்  பொகோட்டா  கேட்டுக்கொண்டுள்ளது,” என்று பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தீவிரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகள், எங்கள் […]

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பாதிப்பாக இது மாறக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பேரழிவை ஏற்படுத்தும் எபோலா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

  • August 13, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பாதிப்பாக இது மாறக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) புதன்கிழமை கூறுகையில், தற்போதைய வேகத்தில் பரவினால், இந்த பாதிப்பானது 2014 முதல் […]

ஐரோப்பா

ஜப்பான் உரிமைக் கோரும் சர்ச்சைக்குரிய தீவுக்கு புட்டின் விஜயம்

  • August 13, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜப்பான் உரிமை கோரும் தீவான இடுருப்பிற்கு (Iturup) இன்றைய தினம்  களவிஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்தத் தீவுத் தொடருக்கு புதின் நேரில் மேற்கொண்ட முதல் பயணம் இது என அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) விவரித்தது. இந்தப் பயணத்தின்போது, ​​ரஷ்யாவின் தூரக் கிழக்கில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளை மேற்பார்வையிட்ட பின்னர், அவர் இடுருப்பில் உள்ள யாஸ்னி மீன் பதப்படுத்தும் ஆலையைப் பார்வையிட்டுள்ளார். இதற்கடையே ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் X தளத்தில் […]

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு12) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் தலைமன்னாரில் கைது

  • August 13, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு12) கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. சர்வதேச கடல் எல்லையை மீறி, சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தரைமட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னாருக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. இந்தியா செய்தி

இந்தியாவில் சைபர் மோசடியை தடுக்க 3,718 செயலிகள் முடக்கம்

  • August 13, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. பொது​மக்​களை ஏமாற்​ற பயன்​படுத்​தப்​படும் சட்​ட​விரோத செயலிகளை கண்​டறிந்து தடை செய்ய மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள நடவடிக்​கைகள் குறித்து பெங்​களூரு மத்​திய தொகுதி பாஜக உறுப்​பினர் பிசி மோகன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்​திய உள்​துறை இணை​யமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் மக்​களவை​யில் எழுத்து மூலம் வழங்கியுள்ள பதிலில், […]

ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை 'ஒன் நேஷன்' (One Nation) கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்க ‘One Nation’ அழுத்தம்

  • August 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை ‘வன் நேஷன்’ (One Nation) கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா சந்தித்து வரும் வீடுகள் பற்றாக்குறை மற்றும் சேவைத் துறைகளில் உள்ள நெரிசல், குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் அழுத்தங்கள் காரணமாக, புலம்பெயர்வு அளவுகள் குறித்த விவாதம் அந்நாட்டு அரசியலில் மிக முக்கியப் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருப்பினும், வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரை அரசியல் கட்சிகள் […]

உலகம்

ICE அதிகாரிகளுக்கு மின் அதிர்ச்சி கையுறைகளை வழங்க திட்டம்

  • August 13, 2026
  • 0 Comments

அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகமை (ICE), களத்தில் உள்ள அதிகாரிகளுக்காக மின் அதிர்ச்சி கையுறைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ICE-இன் ஒரு அங்கமான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (Department of Homeland Security) இணையதளத்தில் உள்ள குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ட்ரம்ப் நிர்வாகம் சுமார் 20 மில்லியன் டொலர் வரை செலவிடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மின் […]