பிரித்தானியாவின் பொருளாதாரம் – ஜுன் மாதத்தில் எதிர்பாராத வளர்ச்சி
பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜூன் மாதத்தில் எதிர்பாராத விதமாக வளர்ச்சி கண்டதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3% உயர்ந்ததாகவும் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவித்துள்ளன.
ஜூன் மாத இறுதி வரையிலான மூன்று மாதங்களைக் கொண்ட இரண்டாவது காலாண்டில், பொருளாதாரம் 0.4% வளர்ச்சி கண்டதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது.
இருப்பினும் பொருளாதார வல்லுநர்கள், மே மாதத்துடன் ஒப்பிடுகையில் மாதாந்திர அடிப்படையில் வளர்ச்சி இருக்காது என்று கணித்திருந்தனர்.
இதற்கிடையே பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம், “சவாலான நிதி நிலைமையின் பின்னணியில், வணிகங்களுக்கான செலவுகளைக் குறைக்கத் தனது அரசாங்கம் தன்னால் இயன்றதைச் செய்யும் என்று கூறியுள்ளார். மேலும், குடும்பங்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் ஈரான் போரின் தாக்கம், அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் நிறுவனங்களுக்குச் சுமையாக இருப்பதாலும், குடும்பங்களின் வரவு செலவுத் திட்டங்களைப் பாதிப்பதாலும், இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் வளர்ச்சி ீதம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




