உலகம் செய்தி

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் Yayoi Kusama காலமானார்

சிற்பங்கள் மற்றும் பிரம்மாண்ட கலைப்படைப்புகள் (Installations) மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார்.

சிற்பங்கள் மற்றும் பிரம்மாண்ட கலைப்படைப்புகள் (Installations) மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார்.

இத்தகவலை அவரது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆகஸ்ட் 14, 2026 அன்று டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் யாயோய் குசாமா காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தனது வாழ்நாள் முழுவதையும் கலை உருவாக்கத்திற்காக அர்ப்பணித்த குசாமா, காட்சிப் கலை (Visual art), செயல்முறை வடிவக் கலை (Performance), புனைகதை மற்றும் கவிதைகள் எனப் பல்வேறு துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகப்பு நிற விக் (red wig) மற்றும் புள்ளி வடிவ ஆடைகள் (polka-dot ensembles) அணிவதை வழக்கமாகக் கொண்ட குசாமா, மனநலப் பாதிப்புகள் காரணமாகக் கடந்த பல பத்தாண்டுகளாகத் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மனநல மருத்துவமனையில் வசித்து வந்தபடியே கலைச் சேவையைத் தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி