செய்தி விளையாட்டு

FIFA தொடர்களை புறக்கணிக்கும் முடிவை கைவிட்டது UEFA

FIFA தொடர்களைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

FIFA தொடர்களைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின் (Gianni Infantino) திட்டம் இனி ஒருபோதும் முன்னெடுக்கப்படாது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டதையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முக்கிய முடிவு மொனாக்கோவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள UEFA வின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

முன்னதாக, கடும் எதிர்ப்புகள் காரணமாக இன்பான்டினோவின் திட்டம் கைவிடப்பட்ட போதிலும், புறக்கணிப்பைத் தவிர்ப்பதற்கான நிபந்தனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என UEFA தெரிவித்திருந்தது.

விளையாட்டுத் துறையின் தன்மையைச் சிதைக்கும் இத்தகைய முயற்சிகள் மீண்டும் நடக்காது என்பதற்குத் தெளிவான உத்தரவாதங்கள் தேவை என்றும் வலியுறுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக உறுதியளித்த இன்பான்டினோ, தனது தவறுகளுக்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.

தற்போது புறக்கணிப்பு அச்சுறுத்தல் திரும்பப் பெறப்பட்டால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்.

இத்தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் போலந்து ஆகிய 6 ஐரோப்பிய அணிகள் பங்கேற்கவுள்ளன.

அதேவேளை, FIFA தலைமையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை UEFA தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இன்பான்டினோ பதவி விலக வேண்டும் அல்லது புதிய வேட்பாளரை எதிர்கொள்ள வேண்டும் என UEFA தலைவர் அலெக்சாண்டர் Aleksander Ceferin ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி