“கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது” – ட்ரம்ப்
கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா மீதான வரிவிதிப்பை தொடர்ந்து அந்நாடு பதில் நடவடிக்கையாக அமெரிக்கா மீது வரி விதித்துள்ளது.
இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட ட்ரம்ப், நமக்குத் தேவையான எதுவும் அவர்களிடம் இல்லை, சரி, நம்மால் சமாளிக்க முடியும்.
அதாவது, ஓரிரு விஷயங்கள் சற்று சிரமத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவற்றை நாம் வேறு இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இனிமேல் உங்களால் இப்படிச் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனடிய இறக்குமதிகள் மீது ட்ரம்ப் சனிக்கிழமையன்று 50 சதவீதம் வரியை விதிப்பதாக அறிவித்தார்.
இதற்கு பதிலடியாக கனடாவும் 50 சதவீதம் வரியை விதித்தமை குறிப்பிடத்தக்கது.




