உலகம் செய்தி

அமெரிக்க அழுத்தத்துக்கு பணிந்து ICC இல் இருந்து வெளியேறியது தஜிகிஸ்தான்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) விலகுவதற்கான நடவடிக்கையை தஜிகிஸ்தான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) விலகுவதற்கான நடவடிக்கையை தஜிகிஸ்தான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

குறித்த நீதிமன்றத்தை பலவீனப்படுத்தும் இராஜதந்திர முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள நிலையில், அதிலிருந்து விலகும் நான்காவது நாடாக தஜிகிஸ்தான் மாறியுள்ளது.

தஜிகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆளுகை அமைப்பான உறுப்பு நாடுகளின் சபைத் தலைமை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வைப்பாளர் அறிவிப்பின்படி, தஜிகிஸ்தான் 2026 நவம்பர் 20ஆம் திகதி ரோம் சட்டப்பிரிவிலிருந்து (Rome Statute) விலகுவதற்கான அறிவித்தலை சமர்ப்பித்துள்ளது. இந்த விலகல் 2027 நவம்பர் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து உறுப்பு நாடுகள் விலகுவது, சர்வதேச நீதிக்கான கூட்டு முயற்சிகளைப் பாதிக்கக்கூடும் என நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் சபைத் தலைமை கவலை தெரிவித்துள்ளது. அத்துடன், தஜிகிஸ்தான் தொடர்ந்து நீதிமன்றத்துடன் இணைந்து செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தஜிகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி