ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf உலகம் செய்தி

இஸ்லாமாபாத் ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்

  • June 24, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, அமெரிக்காவின் தோல்விப் பிரகடனமாகும் என்று ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf தெரிவித்தார். அஜர்பைஜானில் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என்று ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “இஸ்லாமாபாத் ஒப்பந்தம் எவ்வித அழுத்தத்தாலோ அல்லது கட்டாயத்தினாலோ ஏற்படுத்தப்பட்டது அல்ல, மாறாக வீரமிக்க ஈரானிய தேசத்தின் சகிப்புத்தன்மை மற்றும் அதிகாரத்தின் விளைவாகவே சாத்தியமானது.” எனவும் Mohammed Bagher Ghalibaf கூறியுள்ளார். சுதந்திர நாடுகள்மீது […]

இலங்கை

இலங்கையில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை: நாடாளுமன்றில் சட்டமூலம் சமர்ப்பிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கைப் நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சமூக ஊடகங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு மசோதா’, சிறுவர்கள் இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆளாவதைத் தடுப்பதுடன், சமூக ஊடக மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கான புதிய விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்ட வரைவின்படி, இலங்கையில் செயல்படும் சமூக ஊடக சேவை வழங்குநர்கள், […]

2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். செய்தி

மீண்டெழுகிறது சுற்றுலாத்துறை – 1.1 மில்லியன் பயணிகள் இலங்கை வருகை

  • June 24, 2026
  • 0 Comments

2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச்சபையின் தரவு பட்டியலில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 281,418 பேரும், பிரித்தானியாவில் இருந்து 104,754 பேரும், ரஷ்யாவில் இருந்து 76,963 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். குறித்த நாடுகளே முதல் மூன்று இடங்களில் உள்ளன. சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, போலந்து, கனடா […]

உலகம்

பீட் ஹெக்ஸெத்தின் தலைமை – மூத்த இராணுவ தலைவர்கள் பதிவி விலகல்

  • June 24, 2026
  • 0 Comments

ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் தளபதியான ஜெனரல் கிறிஸ்டோபர் டோனாஹூ (General Christopher Donahue) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது விலகல், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின் கீழ் இடம்பெறும் இராணுவ மறுசீரமைப்பை எடுத்துக்காட்டுகிறது. பீட் ஹெக்ஸெத் மூத்த இராணுவப் பதவிகளைச் சீரமைக்க வாதிடுகிறார். மேலும் பீட் ஹெக்ஸெத்தின் தலைமையில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட உயர் தலைவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அல்லது முன்கூட்டியே வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பிரான்சில் இன்று 58 பிராந்தியங்களுக்கு கடும் வெப்பம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா செய்தி

பிரான்சில் கடும் வெப்ப அலை-மின்சார கட்டமைப்பு பாதிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலை, பிரான்சில் ஒரு பெரும் மின்சார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடமேற்கு பிரான்சில் சுமார் 68,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஃபினிஸ்டெர் கடற்கரைப் பகுதியில் மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு மின்மாற்றி கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமை இரவு குயிம்பர் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் மின் கட்டமைப்பு இயக்குநர்களின் குழுக்கள் இரவு முழுவதும் மின்சாரத்தை […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் குப்பை சேகரிக்கும் நேரம் மாற்றியமைப்பு

  • June 24, 2026
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்கள் குப்பை சேகரிப்பு நேரங்களை மாற்றியமைத்து வருகின்றன. வெப்பநிலை 40°C வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் பல இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பமான காலநிலையில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய செல்தன்ஹாம் (Cheltenham), சோமர்செட் (Somerset) மற்றும் பிரிஸ்டல் (Bristol)  உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகள், அதிகாலை 4 மணி முதலே குப்பை சேகரிப்பைத் தொடங்குகின்றன. தெற்கு குளோசெஸ்டர்ஷயர் (Gloucestershire […]

பிராந்தியத்தில் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், வான்வழிப் பயணங்களுக்கு உயர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பா செய்தி

ஈரான், லெபனான் வான்வெளிகள் ஆபத்து – EU எச்சரிக்கை

  • June 24, 2026
  • 0 Comments

ஈரானிய மற்றும் லெபனான் வான்வெளிகளைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு முகமை (EASA) விமான நிறுவனங்களுக்குப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பிராந்தியத்தில் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், வான்வழிப் பயணங்களுக்கு உயர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, ஈரான், ஈராக் மற்றும் லெபனான் பகுதிகளில் திடீர் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிற அண்டை நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்தும்போதும் […]

இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, உலகம் செய்தி

லெபனான் பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய திட்டம் முன்வைப்பு

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, லெபனானில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், இஸ்ரேலியப் படைகள் குறிப்பிட்ட இடங்களிலிருந்து வெளியேறவும், அங்கு லெபனான் ராணுவம் பொறுப்பேற்கவும் அமெரிக்கா ஒரு புதிய திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் நடமாட்டத்தைத் தடுக்க இந்த ஆக்கிரமிப்பு விலக்கல் திட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான தீர்வு […]

ஐரோப்பா

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் – அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான புட்டின்

  • June 24, 2026
  • 0 Comments

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யா அமைதி பேச்சுவார்ததைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இஸ்தான்புல்லில் முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடர வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தங்களை உக்ரைனிய தூதுக்குழு ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனின் தொடர்சியான தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

தொழிலாளர் கட்சித் தலைமை போட்டியில் இருந்து விலகினார் டேரன் ஜோன்ஸ்

  • June 24, 2026
  • 0 Comments

டேரன் ஜோன்ஸ் தொழிலாளர் கட்சித் தலைமைக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு உள்ளபோதிலும் வரவு செலவு திட்டத்தை  தயாரிக்கக் கிடைக்கும் நேரம் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, அவர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். டேரன் ஜோன்ஸின் இந்த தீர்மானம் ஆண்டி பர்ன்ஹாம் இலகுவாக பிரதமராவதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது. இதற்கிடேயே சர் கெய்ர் ஸ்டார்மரின் இராஜினாமாவால் கவலையடைந்த அல்லது மனமுடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தனது பொருளாதாரக் கொள்கைகள் […]