லெபனான் பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய திட்டம் முன்வைப்பு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, லெபனானில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், இஸ்ரேலியப் படைகள் குறிப்பிட்ட இடங்களிலிருந்து வெளியேறவும், அங்கு லெபனான் ராணுவம் பொறுப்பேற்கவும் அமெரிக்கா ஒரு புதிய திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன,
மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் நடமாட்டத்தைத் தடுக்க இந்த ஆக்கிரமிப்பு விலக்கல் திட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையான தீர்வு எட்டப்படவில்லை என்றாலும், மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.





