உலகம் செய்தி

இஸ்லாமாபாத் ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்

ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf

போர் நிறுத்தம் தொடர்பான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, அமெரிக்காவின் தோல்விப் பிரகடனமாகும் என்று ஈரான் சபாநாயகரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான Mohammed Bagher Ghalibaf தெரிவித்தார்.

அஜர்பைஜானில் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என்று ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“இஸ்லாமாபாத் ஒப்பந்தம் எவ்வித அழுத்தத்தாலோ அல்லது கட்டாயத்தினாலோ ஏற்படுத்தப்பட்டது அல்ல, மாறாக வீரமிக்க ஈரானிய தேசத்தின் சகிப்புத்தன்மை மற்றும் அதிகாரத்தின் விளைவாகவே சாத்தியமானது.” எனவும் Mohammed Bagher Ghalibaf கூறியுள்ளார்.

சுதந்திர நாடுகள்மீது பிறநாடுகள் தங்களின் ஆதிக்கத்தை திணிக்கும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை ஈரான் நிரூபித்துக்காட்டியுள்ளது எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி