பிரான்சில் கடும் வெப்ப அலை-மின்சார கட்டமைப்பு பாதிப்பு
ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலை, பிரான்சில் ஒரு பெரும் மின்சார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வடமேற்கு பிரான்சில் சுமார் 68,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஃபினிஸ்டெர் கடற்கரைப் பகுதியில் மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு மின்மாற்றி கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், செவ்வாய்க்கிழமை இரவு குயிம்பர் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் மின் கட்டமைப்பு இயக்குநர்களின் குழுக்கள் இரவு முழுவதும் மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், புதன்கிழமை இறுதிக்குள் முழு மின்சாரமும் மீட்டெடுக்கப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் இன்று 58 பிராந்தியங்களுக்கு கடும் வெப்பம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் தற்போது கடும் வெப்பத்தை சந்தித்து வருகின்றன, அங்கு இயல்பை விட மிக அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.





