உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 27000 பேர் மாயம்

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 27000 பேர் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு நிலநடுகங்களில் 900இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். அதே நேரத்தில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், உயிரிழப்புகள் 10,000-ஐத் தாண்டுவதற்கு 44 சதவீத வாய்ப்பு இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

உலகம்

நடுவானில் விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு : ஏர் கனடா விமானம் அவசரத் தரையிறக்கம்

  • June 25, 2026
  • 0 Comments

நியூவார்க்கிலிருந்து ஹாலிஃபாக்ஸ் நோக்கிச் சென்ற ஏர் கனடா விமானம் நடுவானில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக பாஸ்டனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது, விமானத்தின் கேப்டனுக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பணிப்பெண் ஒருவர் குறித்த விமானியை காக்பிட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார். மேலும் பல பயணிகள் தங்கள் சீட் பெல்ட்களைப் பயன்படுத்தி சுமார் 40 நிமிடங்கள் அவரை அசையாமல் வைத்திருக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தை இயக்கிய மற்றொரு விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார். […]

டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு என்று வரும்போது, அதன் தன்மை மற்றும் வகையைப் பொறுத்தே சர்வதேச அளவில் புகழ்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிவரும். அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி: உண்மை கண்டறியப்படுமென நீதி அமைச்சர் உறுதி

  • June 25, 2026
  • 0 Comments

“செம்மணி மனித புதைகுழி தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படும்” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (25) சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்தச் சூளுரையைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளிக்கையில், “செம்மணி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு என்று வரும்போது, அதன் தன்மை மற்றும் வகையைப் பொறுத்தே சர்வதேச அளவில் புகழ்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் […]

உலகம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது கூட்டத்திற்குள் புகுந்த கார் – 17 பேர் காயம்!

  • June 25, 2026
  • 0 Comments

காபோ சான் லூகாஸில் (Cabo San Lucas) உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மீது இன்று கார் ஒன்று மோதியதில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளனர். செக்கியாவுக்கு (Czechia)எதிரான மெக்சிகோவின் வெற்றியைத் தொடர்ந்து இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில்,  கருப்பு நிற கார் ஒன்று, பெருந்திரளான ரசிகர்களின் கூட்டத்திற்குள் புகுந்து செல்வது காட்டப்பட்டது. இந்நிலையில் காரை செலுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் […]

வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். உலகம் செய்தி

100 இற்கு மேற்பட்ட கட்டிடங்கள் சரிவு

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira) மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இக்குழுக்கள் அங்கு வருகை தரும் ஏனைய சர்வதேச மீட்புக் குழுக்களுக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் இதர ஆதரவை வழங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மீட்புக் குழுக்கள் லா குவைரா மற்றும் தலைநகர் […]

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம். அரசியல் இலங்கை செய்தி

கோழிப்பண்ணைமீது நரிக்கு ஏன் அக்கறை? கடுப்பாகிய நீதி அமைச்சர்

  • June 25, 2026
  • 0 Comments

நீதித்துறை பற்றி எதிரணி உறுப்பினர்கள் பேசுவதானது, கோழிப்பண்ணை மீது நரி அக்கறை காட்டுவது போல் உள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம். கடந்த காலங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு விதத்திலும், சாதாரண மக்களுக்கு வேறு விதத்திலுமே சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கட்சி தாவினால் வழக்குகள் மாயமாகும் நிலையும் அன்று […]

ஐரோப்பா

பாரிஸில் காரில் மூச்சுத்திணறி உயிரிழந்த சிறுவன் – மூத்த பிரஜைகளுக்கு எச்சரிக்கை

  • June 25, 2026
  • 0 Comments

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில்  காரில் சிக்கிய மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் காரில் உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிய தந்தை அவரை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் பின்னர் மீண்டும் காருக்கு திரும்பியபோது சிறுவனை சுயநினைவின்றிய நிலையில்  மீட்டதாகவும் தெரியவருகிறது. அதேநேரம் மேலும் 03 சிறுவர்களும் காரில் இருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை 150 ஆண்டுகளில் முதன்முறையாக பாரிஸில் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் வெப்பம் தொடர்பான மரணங்கள் அதிகரித்துள்ளன. பிரெஞ்சு அதிகாரிகள் மிக உயர்ந்த அளவிலான […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் எப்போது?

  • June 25, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி அலவதுவல நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருகின்றது. மாகாணசபைத் தேர்தல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாணசபைத் தேர்தலை விரைவாக […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் முற்றுகை – மக்ரோன் தகவல்

  • June 25, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் நிழல் கப்பல் படையைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்றை பிரெஞ்சு படைகள் இடைமறித்ததாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிசிலி கடற்கரைக்கு அப்பால் “கடல்சார் சட்டத்தை மீறி” பயணித்துக் கொண்டிருந்த “டெலிவர்” என்ற கப்பலை கடற்படை இடைமறித்ததாக கூறியுள்ளார். அதேநேரம் படையினர் கப்பலில் ஏறி சோதனையிடுவதைக் காட்டுவதாகத் தோன்றும் காணொளிக் காட்சிகளை மக்ரோன் பகிர்ந்துள்ளார். டெலிவர் என்பது கேமரூனியக் கொடியைக் கொண்ட ஒரு கப்பலாகும். […]

வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

164 பேர் பலி – 971 பேர் காயம்: சர்வதேச உதவி கோருகிறது ஐ.நா.

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக லா குவைரா மாநிலம் இடிபாடுகளால் சூழப்பட்ட ஒரு பேரிடர் மண்டலமாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், அங்கிருந்து குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடந்த நூற்றாண்டில் அந்தப் பிராந்தியத்தில் […]