அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் எப்போது?

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி அலவதுவல நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

“மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருகின்றது. மாகாணசபைத் தேர்தல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவோம்.” என்றார்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை