உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது கூட்டத்திற்குள் புகுந்த கார் – 17 பேர் காயம்!
காபோ சான் லூகாஸில் (Cabo San Lucas) உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மீது இன்று கார் ஒன்று மோதியதில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
செக்கியாவுக்கு (Czechia)எதிரான மெக்சிகோவின் வெற்றியைத் தொடர்ந்து இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவருகிறது.
இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில், கருப்பு நிற கார் ஒன்று, பெருந்திரளான ரசிகர்களின் கூட்டத்திற்குள் புகுந்து செல்வது காட்டப்பட்டது.
இந்நிலையில் காரை செலுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவசர மருத்துவ சேவைகள் உதவி வழங்கின.




