உலகம் செய்தி

100 இற்கு மேற்பட்ட கட்டிடங்கள் சரிவு

வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira) மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இக்குழுக்கள் அங்கு வருகை தரும் ஏனைய சர்வதேச மீட்புக் குழுக்களுக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் இதர ஆதரவை வழங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மீட்புக் குழுக்கள் லா குவைரா மற்றும் தலைநகர் கராகஸ் (Caracas) ஆகிய பகுதிகளையே பிரதான மீட்பு மண்டலங்களாகக் கொண்டு கவனம் செலுத்தும் என்றும், வெனிசுலாவின் ஏனைய பகுதிகள் அனைத்தும் அந்த நாட்டு சிவில் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மீட்புக் குழுக்களால் கையாளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி