இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜய் முன்னிலை!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான தவெக முன்னிலைப் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட […]

இலங்கை

கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

  • May 4, 2026
  • 0 Comments

கண்டி – கடுகஸ்தோட்டை – குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தல் : 85 இடங்களில் த.வெ.க முன்னிலை!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. தற்போதைய நிலவரங்களின்படி, தவெக 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 66 இடங்களிலிலும்,  திமுக 50 இடங்களிலும்  முன்னிலை வகிக்கிறது. இதேவேளை தற்போது பதவியில் உள்ள   34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். குறிப்பாக சென்னையில்   மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது.

உலகம் செய்தி

ஈரான் ட்ரோன்களை அழிக்க UAE இற்கு ‘Iron Beam’ வழங்கியது இஸ்ரேல்!

  • May 4, 2026
  • 0 Comments

ஈரானின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள, இஸ்ரேல் புதிதாக உருவாக்கிய ‘அயர்ன் பீம்’ ‘Iron Beam என்ற ஆயுதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆயுதத்தில் உள்ள லேசர் கற்றைகள், ஈரான் ட்ரோன்களை நடுவானிலேயே சாம்பலாக்கிவிடும் வல்லமை கொண்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல ‘ஸ்பெக்ட் ரா’ என்ற கண்காணிப்பு கருவியையும் அமீரகத்துக்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது. இது ஈரானின் ட்ரோன்கள் 20 கி.மீ தூரத்துக்கு அப்பால் வரும்போதே எச்சரிக்கை விடுக்கும். இதன் மூலம் அயர்ன் பீம் ஆயுதங்களை பயன்படுத்தி […]

இலங்கை செய்தி

தையிட்டி பிரச்சினையை நிதானமாகவே கையாள்வோம்: ஆளுங்கட்சி எம்.பி.

  • May 4, 2026
  • 0 Comments

” தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே கையாள வேண்டும். தென்பகுதியில் இருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கு புது இரத்தத்தை பாய்ச்சுவதாக இந்தப் பிரச்சினை அமைந்து விடக்கூடாது.”- என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார். தையிட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள காணிகளை விடுவிக்கும் முகமாக மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் நெருக்கடி மோசமடையும்: ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை!

  • May 4, 2026
  • 0 Comments

எரிபொருள் நெருக்கடி இன்னும் மோசமடையக்கூடும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எரிபொருள் வரிச் சலுகையை நீட்டிப்பது குறித்த உறுதியான வாக்குறுதியை அளிக்க மறுத்துள்ளார். வரவிருக்கும் கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டத்தில் நேரடி எரிபொருள் நிவாரணத்திற்குப் பதிலாக, தலைமுறை சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் மூலதன ஆதாய வரி மற்றும் சொத்து வரி மாற்றங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது. இந்த வரிச் சீர்திருத்தங்கள் எதிர்கால சந்ததியினருக்கு உதவும் என்று ஆளுங்கட்சி வாதிட்டாலும், இது தேர்தலின் […]

இந்தியா

த.வெ.க. தலைவர் விஜயின் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுத. த.வெ.க. தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் […]

இலங்கை தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் – கொளத்தூர் தொகுதி ஸ்டாலின் வசம்!

  • May 4, 2026
  • 0 Comments

கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது. நெல்லை தொகுதியில் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு இரண்டு தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி கொளத்தூர் தொகுதியை முதலமைச்சர் ஸ்டாலின் கைப்பற்றியுள்ளதுடன், பெரம்பூர் தொகுயை த.வெ.க தலைவர் விஜய் கைப்பற்றியுள்ளார்.

உலகம்

தென்கொரியாவில் தூங்குவதற்கு அழைப்பு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

தென்கொரியாவில் தூங்கும் போட்டியில் பங்கேற்பதற்காக பலர் அணித்திரண்டுள்ளனர். குறித்த போட்டி நேற்றைய தினம் ஏற்பாடு இடம்பெற்றது. ஹான் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் அதிக வேலைப்பழு மற்றும் தூக்கமின்மையால் வாடும் பலர் இந்த போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ‘பவர் நாப் போட்டி’  (power nap contest) என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் உறங்கும் அழகி அல்லது இளவரசனைப் போன்ற ஆடைகளை அணிந்து, வயிறு நிறைய  சாப்பிட்டு வர வேண்டும் என்ற […]

செய்தி விளையாட்டு

பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத்!

  • May 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 46 – வது லீக் ஆட்டத்தில குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆரம்பம் முதலே பஞ்சாப் Punjab Kings துடுப்பாட்வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஆகியோர் ஒரு ஓட்டம் கூட பெறாமல் வெளியேறினர். சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 57 […]