செய்தி விளையாட்டு

பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத்!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 46 – வது லீக் ஆட்டத்தில குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans வெற்றி பெற்றுள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஆரம்பம் முதலே பஞ்சாப் Punjab Kings துடுப்பாட்வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஆகியோர் ஒரு ஓட்டம் கூட பெறாமல் வெளியேறினர்.
சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்று (3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள அணியை மீட்டெடுத்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது.

164 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணிக்குச் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்தது.

சாய் சுதர்சன் 41 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.

இறுதி ஓவர்களில் சில விக்கெட்டுகள் சரிந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

எனினும், குஜராத் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி