தென்கொரியாவில் தூங்குவதற்கு அழைப்பு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு!
தென்கொரியாவில் தூங்கும் போட்டியில் பங்கேற்பதற்காக பலர் அணித்திரண்டுள்ளனர்.
குறித்த போட்டி நேற்றைய தினம் ஏற்பாடு இடம்பெற்றது.
ஹான் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் அதிக வேலைப்பழு மற்றும் தூக்கமின்மையால் வாடும் பலர் இந்த போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
‘பவர் நாப் போட்டி’ (power nap contest) என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் உறங்கும் அழகி அல்லது இளவரசனைப் போன்ற ஆடைகளை அணிந்து, வயிறு நிறைய சாப்பிட்டு வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அமைதியான உறக்கத்தின் அறிகுறியான சீரான இதயத் துடிப்பு உள்ளதா என்பதை உறுதிசெய்ய, அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.





