உலகம்

அமைதி பேச்சுவார்த்தையை புறக்கணிக்கிறாரா ட்ரம்ப்? தூதுவர்களுக்கு உத்தரவு!

  • April 25, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களைத் தீர்ப்பது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff ) மற்றும் ஜாரெட் குஷ்னருக்கு (Jared Kushner) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக அவர்கள் இன்று (25) பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி தனது பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். எந்தவொரு விவாதத்தையும் […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தைக் கடந்தது

  • April 25, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8,40,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 8,40,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர். இதன்படி, வருகை தந்த இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை 1,76,465 ஆகும். பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான […]

இலங்கை செய்தி

அடுத்த மாதம் முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகள்

  • April 25, 2026
  • 0 Comments

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இலகுவான, காகிதமற்ற மற்றும் வினைத்திறனான அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில், வாகன காப்புறுதி […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் இரவு விருந்தில் ட்ரம்ப் பங்கேற்பு – ஊடக சுதந்திரம் குறித்து மீண்டும் விவாதம்

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகையில் நடைபெறும் பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் கலந்துகொள்ள உள்ளார். 1921 முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்வு, பத்திரிகையாளர்களும் ஜனாதிபதியும் ஒன்றாக கலந்துகொள்ளும் ஒரு பாரம்பரிய விருந்தாகும். ஆனால், இது பல ஆண்டுகளாக ஊடக சுதந்திரம் மற்றும் அரசியல் உறவுகள் குறித்து சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. டிரம்ப் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலும் ஊடகங்களை விமர்சித்து வந்தவர். இதற்கு முன்பு இந்த இரவு விருந்தில் அவர் […]

ஐரோப்பா

ஆப்கானிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை : பிரித்தானியாவிற்கு உள்ள சவால்!

  • April 25, 2026
  • 0 Comments

தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்துவது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood ) தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் திட்டங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தலிபான் நிர்வாகத்தை அரசாங்கம் அங்கீகரிக்காத நிலையில் இந்த நடவடிக்கை சவாலாக இருப்பதாக தெரிவித்த அவர், இது சாத்தியப்படும் பட்சத்தில்  குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை  ஏற்படுத்தும் என்றும்  தெரிவித்தார். சிறிய படகுகள் மூலம் […]

இலங்கை செய்தி

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகம் – 10 இலட்சம் ரூபா அபராதம்

  • April 25, 2026
  • 0 Comments

குடிநீர் போத்தலை அதன் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, ஹப்புத்தளையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஹப்புத்தளை, வெலிமடை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான உணவகம் ஒன்றிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, அங்கீகரிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகத்திற்கு சீல்

  • April 25, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் ஒன்று சீல் வைக்கப்பட்டது. மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு உணவக நிர்வாகம் சார்பில் எவரும் முன்னிலையாகாத காரணத்தால், உணவகத்தை சீல் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீயில் கருகி இரு குழந்தைகள் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton) உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைப் பிரிவினர், அந்த வீட்டிலிருந்து 02 குழந்தைகளை மீட்டனர்.  இருப்பினும் குழந்தைகள் இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளும் பெண் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் குறித்த  வீட்டைச் சுற்றி வளைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலகம் செய்தி

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. தனது பாகிஸ்தான் பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தி இருந்தார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்குரிய மத்தியஸ்த முயற்சியை பாகிஸ்தான் முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் […]

இலங்கை

இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் விலை ஏறுமுகத்திலேயே பயணிக்கும்!

  • April 25, 2026
  • 0 Comments

2026-ஆம் ஆண்டில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை காரணமாக, வரும் காலத்தில் எண்ணெய் விலைகள் உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவினத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் ஒரு பெரும் பகுதியாக உள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் இது மொத்த இறக்குமதியில் சராசரியாக கிட்டத்தட்ட […]

error: Content is protected !!