இளவரசி டயானாவின் பழிவாங்கும் உடை ஏலத்திற்கு வருகிறது
மறைந்த இளவரசி டயானா 1994-ல் அணிந்திருந்த “பழிவாங்கும் உடை”, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது.
கிரேக்க வடிவமைப்பாளர் கிறிஸ்டினா ஸ்டாம்போலியன் வடிவமைத்த இந்த உடை டிசம்பர் 9 அன்று விற்பனைக்கு வரும்.
இவ் உடையானது £220,000 (S$377,050) வரை விலை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
1994 ஜூன் மாதம், நிதி திரட்டும் இரவு விருந்திற்காக லண்டனில் உள்ள செர்பன்டைன் கேலரிக்கு வந்தபோது டயானா இந்த உடையை அணிந்திருந்தார்.
இந்த உடை இதற்கு முன்னர் 1997-ல் ஏலத்தில் விற்கப்பட்டதாக சோதேபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆனால் அது குறித்த மேலதிக விவரங்களை அளிக்கவில்லை.





