ஐரோப்பா

ஆப்கானிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை : பிரித்தானியாவிற்கு உள்ள சவால்!

தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்துவது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood ) தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் திட்டங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான் நிர்வாகத்தை அரசாங்கம் அங்கீகரிக்காத நிலையில் இந்த நடவடிக்கை சவாலாக இருப்பதாக தெரிவித்த அவர், இது சாத்தியப்படும் பட்சத்தில்  குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை  ஏற்படுத்தும் என்றும்  தெரிவித்தார்.

சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்துக்கு வந்தவர்களில் ஆப்கானியர்களே அதிகளவாக உள்ளதாகவும், கடந்த ஆண்டில் மாத்திரம் 6,360 பேர் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் நிலவுவதால், நாடு கடத்தும் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்