வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் இரவு விருந்தில் ட்ரம்ப் பங்கேற்பு – ஊடக சுதந்திரம் குறித்து மீண்டும் விவாதம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகையில் நடைபெறும் பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் கலந்துகொள்ள உள்ளார்.
1921 முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்வு, பத்திரிகையாளர்களும் ஜனாதிபதியும் ஒன்றாக கலந்துகொள்ளும் ஒரு பாரம்பரிய விருந்தாகும்.
ஆனால், இது பல ஆண்டுகளாக ஊடக சுதந்திரம் மற்றும் அரசியல் உறவுகள் குறித்து சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.
டிரம்ப் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலும் ஊடகங்களை விமர்சித்து வந்தவர். இதற்கு முன்பு இந்த இரவு விருந்தில்
அவர் கலந்துகொள்ள மறுத்திருந்தார். ஆனால் இந்த முறை அவர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் நகைச்சுவை நிகழ்ச்சி போன்ற சில பாரம்பரிய அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, பத்திரிகை அமைப்புகள் இந்த நிகழ்வில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வெள்ளை மாளிகை
நிருபர்கள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளன.
இந்த இரவு விருந்தின் தற்போதைய பங்கு மற்றும் நோக்கம் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.





