கேட்விக் விமான நிலைய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – சேவைகள் தடைபட வாய்ப்பு
கேட்விக் விமான நிலையத்தில் 220-க்கும் மேற்பட்ட உதவிப் பயணப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஊதியப் பிரச்சினை காரணமாக அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுனைட் தொழிற்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தம், செப்டம்பர் 17 முதல் 21 வரையிலும், செப்டம்பர் 23 முதல் 26 வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
நிறுவனம் வில்சன் ஜேம்ஸ் வழங்கிய, 3.4 சதவீத ஊதிய உயர்வை உள்ளடக்கிய இரண்டு ஆண்டு கால சலுகையை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒருமனதாக நிராகரித்துள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்ட ஊதியச் சலுகை வழங்கப்படாவிட்டால், இந்த வேலைநிறுத்தம் விமான நிலையம் முழுவதும் தவிர்க்க முடியாத இடையூறுகளை ஏற்படுத்தும் என்று யுனைட் எச்சரித்துள்ளது.
இந்த பாதிப்பைக் குறைப்பதற்காக வில்சன் ஜேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், வழக்கமான விமான அட்டவணையை இயக்க எதிர்பார்ப்பதாகவும் கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.




