இலங்கை செய்தி

அடுத்த மாதம் முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகள்

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின்
ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இலகுவான, காகிதமற்ற மற்றும் வினைத்திறனான அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில், வாகன காப்புறுதி முறையை நவீனமயமாக்கல், தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றிற்கான முக்கிய ஒரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

மேலும், பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவதன் மூலம், இது நாடு தழுவிய ரீதியில் சுற்றாடல் நிலைத்தன்மைக்கும் பங்களிப்பு செய்யும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை