செய்தி

இலங்கையில் கோர விபத்து – மூவர் பலி, 30 க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!

  • December 21, 2024
  • 0 Comments

ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். அத்துடன் குறித்த விபத்தில் 30ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்தியா

இந்தியாவில் குழந்தைக்கு பெயர் வைக்க முடியாமல் விவாகரத்து வரை சென்ற தம்பதி

  • December 21, 2024
  • 0 Comments

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என முடிவெடுப்பதில் தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த தம்பதி நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். தங்களின் மகனுக்கு என்ன பெயர் வைப்பது என்று இருவரும் மூன்று ஆண்டுகள் சண்டைபோட்டதாக தெரியவந்துள்ளது. இறுதியில் அவர்கள் விவாகரத்து வரை சென்றுவிட்டனர். சிக்கல் 2021ஆம் ஆண்டு தொடங்கியது. மனைவி மகனைப் பெற்றவுடன் தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டார். கணவன் மகனுக்குத் தேர்ந்தெடுத்த பெயர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. பெயரை மனைவி ஏற்றுக்கொள்ள மறுத்ததால் கணவன் அவரைத் […]

பொழுதுபோக்கு

விடுதலை 2 – முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • December 21, 2024
  • 0 Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 நேற்று வெளியானது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடித்திருந்த இப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகின்றன. முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியார் காவல்துறையிடம் சிக்குவார். அதன் தொடர்ச்சியாக வரும் இரண்டாம் பாகத்தில் அவருடைய கதை விரிவாக காட்டப்பட்டிருக்கிறது. இதில் பெருமாள் வாத்தியார் யார்? அவருடைய மக்கள் இயக்கம் எப்படி உருவானது? அவருடைய குடும்பம் என அனைத்தையும் வெற்றிமாறன் தன்னுடைய ஸ்டைலில் காட்டியிருக்கிறார். அதற்கு உயிர் கொடுப்பது போல் விஜய் சேதுபதியின் […]

உலகம்

புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்!

  • December 21, 2024
  • 0 Comments

புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானதால் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. WWE போட்டிகளில் மாமா என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். இவருக்கு தற்போது வயது 66 ஆகும். அதேநேரம், அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் எதும் விளக்கப்படவில்லை. உயரம் குறைவானவராக இருந்தாலும், மிகுந்த பராக்கிரமத்துடன் சண்டையிட்டு எதிராளிகளை நிலைகுலைய செய்யும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் சடுதியாகக் குறைந்த முட்டை விலை!

  • December 21, 2024
  • 0 Comments

இலங்கையில் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. சடுதியாக விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஜேர்மனியில் அதிர்ச்சி – கிறிஸ்துமஸ் சந்தைக்குள் புகுந்த கார் – இருவர் பலி, 80 பேர் காயம்!

  • December 21, 2024
  • 0 Comments

ஜேர்மனி – Magdeburg நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் 80 பேர் காயமடைந்தனர். 60 முதல் 80 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என ஜெர்மனியின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரை செலுத்திச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், […]

செய்தி வாழ்வியல்

யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால், தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • December 21, 2024
  • 0 Comments

இந்த நவீன காலத்தில் அதிக யூரிக் அமிலம் பிரச்சனை பலரிடம் காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் நமது தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை. யூரிக் அமிலம் என்பது நமது உடலில் உள்ள ஒரு வகையான கழிவுப் பொருளாகும். இது பியூரின் என்ற வேதிப்பொருளின் முறிவால் உருவாகிறது. பொதுவாக, சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி, சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகின்றன. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ​​அது மூட்டுகளைச் சுற்றி படிகங்களாக குவியத் […]

இலங்கை செய்தி

Fitch Ratings – இலங்கை ‘CCC+’ ஆக உயர்வு!

  • December 21, 2024
  • 0 Comments

இலங்கையின் நெடுங்கால வெளிநாட்டு நாணய கடன் வழங்குநர் இயலாமை மதிப்பீட்டு RD என்ற கட்டுப்படுத்தப்பட்ட இயலாமை நிலையிலிருந்து CCC+ நிலைக்கு Fitch ரேட்டிங் உயர்த்தியுள்ளது. பிட்ச் ரேட்டிங் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் உள்ளூர் நாணய கடன் வழங்குநர் மதிப்பீட்டையும் CCC – என்ற நிலையிலிருந்து CCC+ நிலைக்கு Fitch ரேட்டிங் உயர்த்தியுள்ளது.

ஆசியா

ஜப்பானில் குழந்தையின் உயிரை பறித்த சீஸ்

  • December 21, 2024
  • 0 Comments

ஜப்பானில் சீஸ் உருண்டை தொண்டையில் சிக்கியதால் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிரயை ஏற்படுத்தியுள்ளது. அதுபோன்ற மேலும் 3 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் கூறினர். ஆனால் இதுவரை அந்த குழந்தை மட்டுமே இறந்திருப்பதாக சொல்லப்பட்டது. சம்பவம் ஆகஸ்ட் மாதம் நடந்தது. இரவு உணவின்போது சுமார் 2 செண்டிமீட்டர் அகலம் கொண்ட சீஸ் உருண்டையை குழந்தை உட்கொண்டுள்ளது. அது தொண்டையில் சிக்கியதால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதை வெளியே அகற்ற முடியாததால் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]

செய்தி

குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறும் கோலி – உறுதி செய்த பயிற்சியாளர்

  • December 21, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடிபெயர இருப்பது உறுதியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்துள்ளார். உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருடன் விராட் கோலி சர்வேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். தற்போது ஒரு நாள் கிரிக்கெட் […]