பொழுதுபோக்கு

‘கேப்டன் மில்லர்’ படத்தில் இருந்து வெளியானது இரண்டாவது சிங்கிள்…

  • December 23, 2023
  • 0 Comments

கோலிவுட் திரையுலகில் அறிமுகமானாலும், பாலிவுட்.., டோலிவுட், ஹாலிவுட் என கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளர். இதுவரை தனுஷ் நடித்து வெளியான பாடங்களை விட மிகவும் வித்தியாசமான தோற்றத்தில்… போராளியாக இந்த படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளதால், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது இப்படத்தில் […]

விளையாட்டு

இங்கிலாந்து T20 அணிக்கு ஆலோசக பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்

  • December 23, 2023
  • 0 Comments

டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த சர்வதேச தொடரானது ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் காலிறுதி ஆட்டத்துக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் இங்கிலாந்து டி20 அணிக்கு ஆலோசகர் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். […]

பொழுதுபோக்கு

பொங்கல் ரிலீஸ் இல் இருந்து பின் வாங்கிய லால் சலாம்

  • December 23, 2023
  • 0 Comments

ரஜினியின் படங்கள் என்றாலே பலரும் எதிர்பார்ப்புகளை வைத்து பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ரஜினி படத்திற்கு எப்போதுமே மார்க்கெட் ஒய்யாரத்தில் தான் இருக்கும். ரஜினியை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து லால் சலாம் படத்தை உருவாக்கியிருக்கின்றார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதுவே படத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய பிரமோஷன் ஆக இருக்கும் என்ற ஒரு பிளானில் லால் சலாம் படம் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அத்தனையும் கனவாகவே போகும் அளவிற்கு இருக்கிறது. காரணம் லால் சலாம் படப்பிடிப்பு […]

இலங்கை

யாழ். திருநெல்வேலியில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர் பரிசோதனை

  • December 23, 2023
  • 0 Comments

யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் கடந்த வாரம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அத்துடன் இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது […]

பொழுதுபோக்கு

சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பிடித்த சூரியின் ‘விடுதலை’!

  • December 23, 2023
  • 0 Comments

புனேவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரி நடித்துள்ள ‘விடுதலை’ உட்பட 3 தமிழ் படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. 22-வது சர்வதேச திரைப்பட விழா புனேவில் ஜனவரி 18 முதல் 25ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்பட விழாவில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவுக்கு தேர்வான தமிழ்ப் படங்கள் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த விழாவில் திரையிட இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள ‘விடுதலை’ […]

இலங்கை

பிரான்ஸுக்கு தப்பி செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • December 23, 2023
  • 0 Comments

பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை தவறாக பயன்படுத்தி அவர் பயணிக்க முயன்றுள்ளார். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 12.55க்கு இங்கிலாந்தின் லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 இல் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அங்கு, விமான சேவை அனுமதியின் போது அவர் […]

ஐரோப்பா

கோழி இறைச்சிக்கான இறக்குமதி வரியை இரத்து செய்யும் ரஷ்யா!

  • December 23, 2023
  • 0 Comments

அடுத்த ஆண்டு முழுவதும் 140,000 டன்கள் வரை உறைந்த கோழி இறைச்சிக்கான இறக்குமதி வரியை ரஷ்யா ரத்து செய்யும் என்று ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், விலைகளைக் குறைக்கவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் மீண்டும் தேர்தலில் நிற்கும் ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த வாரம் ஒரு மாரத்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கேள்வி-பதில் அமர்வின் போது முட்டை மற்றும் கோழியின் விலை உயர்ந்து வருவதாக புகார் அளித்த ஓய்வூதியதாரரிடம் மன்னிப்புக்கோரினார். இதனையடுத்தே […]

வட அமெரிக்கா

பிரபல ஹாலிவுட் நடிகரை வீடு புகுந்து தாக்கிய பெண்!

  • December 23, 2023
  • 0 Comments

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் மலிபூவில் உள்ள அவரது வீட்டில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணால் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளார். டூ அன்ட் அ ஹால்ஃப் மென் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் சார்லி ஷீன், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் 47 வயதான பக்கத்து வீட்டுப் பெண் சார்லியின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். நடிகர் சார்லி ஷீன் கதவைத் திறந்ததும் அவரது சட்டையைக் கிழித்து அவரது கழுத்தை நெறித்துள்ளார்.அவரைத் […]

ஆசியா

சிங்கப்பூரில் இந்தியர் ஒருவருக்கு எதிராக இனவெறி எச்சரிக்கை!!

  • December 23, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பயணி ஒருவருக்கு எதிராக வாடகை டாக்ஸி சாரதி இனவெறி கருத்து தெரிவித்த சம்பவம் குறித்து அந்த நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வாடகை டாக்ஸி சாரதி, தொடர்புடைய பயணியை இந்தியாவுக்கே ஓடிவிடு என கூறியதாக தெரியவந்துள்ளது. சிங்கப்பூரின் Grab என்ற வாடகை டாக்ஸி நிறுவன சாரதி ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பயணி தமக்கு ஏற்பட்ட இந்த செயலை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அருகாமையில் […]

இலங்கை

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கில் பணமோசடி!!

  • December 23, 2023
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, கடந்த இரு வாரங்களில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த 2 வார காலப் பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் […]

error: Content is protected !!