ஹார்மூஸ் ஜலசந்திப் பாதையில் அமெரிக்க படைகள் : பயணத்தை தொடர அறிவுரை
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ஹார்மூஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) குறித்த நீர்வழிப் பாதை திறந்தே உள்ளதாக தெரிவித்துள்ளது.
“சர்வதேச நீர்வழியைச் சட்டப்பூர்வமாகக் கடக்க விரும்பும் அனைத்துக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது,” என்று CENTCOM தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், “நியாயமற்ற ஈரானிய ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னிச்சையான அறிவிப்புகள் இருந்தபோதிலும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுத் தயாராக உள்ளன,” என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஈரான் இந்த ஜலசந்தியைக் கட்டுப்படுத்தவில்லை. போக்குவரத்து தடையின்றிச் செல்கிறது,” என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளது.




