வெள்ளப்பெருக்கு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வாளர்கள் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த எச்சரிக்கைகள் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கம்ப்ரியா, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிகக்ப்பட்டுள்ளது.
பல இடங்களில் 30-60 மி.மீ மழையும், அதிக மழை பெய்யும் இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த காற்று வீசும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் பயண இடையூறுகள் ஏற்படலாம் எனவும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.




