Consent Preferences
இலங்கை செய்தி

இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கை – மாலைதீவு புதிய முயற்சி

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இலங்கையும் மாலைதீவும் கலந்துரையாடியுள்ளன.

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இலங்கையும் மாலைதீவும் கலந்துரையாடியுள்ளன.

இது தொடர்பான சந்திப்பு, நேற்று (27) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது, இரு நாடுகளின் சுகாதாரத்துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், மருத்துவப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய மருந்து விநியோகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன், இரு நாட்டு மக்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்தும் வகையில் ஊடகத்துறை அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை மாலைதீவுக்கு வழங்கியமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு மாலைதீவு தூதுவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை