இலங்கை

சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

நீர்கொழும்பு சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த சிறைச்சாலை  திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாளை (13.07) முதல் நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய கைதிகள் காணொளிக் காட்சி இணைப்புகள் மூலம்  இணைக்கப்படுவார்கள் என்று குறித்த திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஆணையர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து,  கைதிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

மாற்றப்பட்ட கைதிகளை அவர்களது வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வது சவாலான விடயமாக மாறியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக சிறைகள் திணைக்களம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்