Consent Preferences
உலகம்

காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – இருவர் உயிரிழப்பு

காசாவில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் இன்று  நடத்திய தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் இருவரும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

குறித்த மருத்துவமனையில் பாதுகாப்பு பணியாளர்களாக பணியாற்றியவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக  இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர்கள் அமைப்பு (MSF), இந்தக் கொலைகளால் தாங்கள் “பேரழிவுக்கு உள்ளானதாக” உணர்ந்ததாகவும், தங்கள் அமைப்பின் மீதான “நேரடித் தாக்குதல்” இது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வளாகத்தில் MSF சின்னங்கள் தெளிவாகக் குறிக்கப்பட்டிருந்தன, மேலும் அதன் இருப்பிடம் இஸ்ரேலிய இராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கும் தெரிந்திருந்தது,” என்று அவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்