லா நினோவிற்கு மாறும் வானிலை – பட்டினிக்கு தள்ளப்படும் மில்லியன் கணக்கான மக்கள்
சூப்பர் எல் நினோ வானிலை நிகழ்வானது, வரும் டிசம்பர் மாதம் உச்சமடைந்து மீண்டும் லா நினோ நிலைக்குச் சரியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பசிபிக் பெருங்கடலின் முக்கியப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
இது, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிக வலிமையான எல் நினோ நிகழ்வாக அமைகிறது.
இதற்கிடையே தற்போதைய நிலையில் இருந்து தொடரும் காலநிலை சீர்குலைவுகள், கூடுதலாக 49 மில்லியன் மக்களைப் பட்டினிக்குத் தள்ளக்கூடும் என்று ஐ.நா. உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது.
அதேநேரம் நிலமை மாற்றமடைந்து லா நினோ நிலைக்கு சரியும்போது பல்வேறு பிராந்தியங்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு, அட்லாண்டிக் சூறாவளிகளின் தீவிரம் மற்றும் , புயல் நிறைந்த வானிலை போன்ற அபாயங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




