Consent Preferences
உலகம் செய்தி

மியன்மாரில் பாடசாலை மீது வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 30 பேர் பலி

மியன்மாரின் மத்திய மக்வே பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமமொன்றில் அமைந்துள்ள பாடசாலை மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரின் மத்திய மக்வே பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமமொன்றில் அமைந்துள்ள பாடசாலை மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒரு கைக்குழந்தையும் பல பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக உள்ளூர் சாட்சியாளர் ஒருவரும், எதிர்க்கட்சியான தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் (NUG) பேச்சாளர் ஒருவரும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (26) பிற்பகல் சுமார் 3 மணியளவில் சின்பாங்வே (Sinbaungwe) நகரப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மற்றும் பௌத்த விகாரை வளாகத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அச்சமயம் அங்கு மத வழிபாட்டு நிகழ்வொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய ஐக்கிய அரசாங்கமும், மக்வே மத்திய இடைக்கால நிர்வாகமும் வெளியிட்ட கூட்டறிக்கையின்படி, இந்தத் தாக்குதலின்போது நான்கு பாரிய வான்வழிக் குண்டுகள், 12 பீரங்கிக் குண்டுகள் மற்றும் ஏழு தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஒன்பது கிளர்ச்சிப் படை உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளதாக தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பேச்சாளர் நாய் போன் லாட் மற்றும் உள்ளூர் சாட்சியாளர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற வேளையில் அப்பகுதியில் நேரடி மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், கிளர்ச்சிப் படையினர் அவ்வப்போது மாத்திரமே அந்தக் கிராமத்தின் ஊடாகச் சென்று வந்ததாகவும் உள்ளூர் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதல் கிளர்ச்சிப் படையினரின் பட்டமளிப்பு நிகழ்வையும் அவர்களின் ஒன்றுகூடலையும் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக இராணுவ ஆதரவு சமூக ஊடகக் கணக்குகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், மியன்மார் இராணுவம் இந்தச் சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமான விளக்கமொன்றை வெளியிடவில்லை.

இதேவேளை, 2021ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆரம்பமான மியன்மாரின் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மார் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி