உலகம்

23 காரட் தங்க தகடுகளால் ஆன ட்ரம்பின் முழு நிர்வாண சிலை திறப்பு

ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், ‘தி ஆரஞ்சு பிளேக்’ The Orange Plague  என்ற தலைப்பிலான எட்டு அடி உயர தங்கச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை, டொனால்ட் ட்ரம்ப் முழு நிர்வாணமாக, தன்னை விட சிறிய உருவம் கொண்ட ஒருவரின் தோள்களின் மீது அமர்ந்திருப்பதைச் சித்தரிக்கிறது.

டேனிஷ் சிற்பி ஜென்ஸ் கால்ஷியோட்டால் Galschiøt உருவாக்கப்பட்ட, 23 காரட் தங்கத் தகடுகளால் ஆன இந்தச் சிற்பம், ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த நிலைப்பாட்டிற்கு எதிரான ஒரு “நையாண்டிக் குரலாக” விளங்குகிறது.

உலகளாவிய சமத்துவமின்மை குறித்த ஒரு நையாண்டி உறுதிமொழி பொறிக்கப்பட்ட பீடத்தின் மீது அமர்ந்திருக்கும் ட்ரம்ப், ஒரு கோல்ஃப் மட்டை, ஒரு பூகோள வடிவ பந்து மற்றும் தராசுகளை ஏந்தியபடி இந்தச் சிற்பத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்தக் கலைப்படைப்பு, நவம்பர் மாதம் துருக்கியில் நடைபெறும் ஐ.நா. COP31 பருவநிலை மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்