பிரெக்ஸிட் விவகாரத்திலிருந்து விலகி முன்னேறி செல்ல வேண்டும் – தெரசா மே வலியுறுத்தல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்து பரிசீலிப்பது தனக்கு “அதிர்ச்சியளிப்பதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
மேலும், பிரெக்ஸிட் விவகாரத்திலிருந்து “முன்னேறிச் செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிபிசி தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட மே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்தின் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும், மற்ற பிரச்சினைகளைக் கையாள்வதற்கான முயற்சிகளைத் தடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பை அரசாங்கம் மதிக்க வேண்டும் எனவும் மே கேட்டுக்கொண்டார்.
வர்த்தகம் மற்றும் இளைஞர்களின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக, பிரதமர் ஆண்டி பர்னம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு ஒன்றை எட்டியுள்ள நிலையில் அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரித்தானியா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்து ஒரு தசாப்தத்திற்குப் பிறகு தற்போதை பிரதமர் பர்னம், மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




