இலங்கை செய்தி

வடக்கு, கிழக்குக்கு ‘வணக்கம்’ போதும்: ‘ஆயுபோவன்’ எதற்கு?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ என சிங்கள மொழியில் குறிப்பிடும் கலாசாரம் சமீப காலமாகப் பின்பற்றப்படுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ என சிங்கள மொழியில் குறிப்பிடும் கலாசாரம் சமீப காலமாகப் பின்பற்றப்படுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

இது பெரிய விடயம் இல்லையென்றபோதிலும், இதுவரைகாலமும் பின்பற்றப்பட்டுவந்த வணக்கம்கூறும் நடைமுறையை தொடர இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளின்போதே அவர் இதனைக் கூறினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கலாசார அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையில் மாகாண அடிப்படையிலான பாரம்பரியங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், ஹோட்டல்களில் ‘வணக்கம்’ என்ற வரவேற்பு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2018 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை, தங்கும் காலம், வருவாய் விவரங்கள், வடக்கு, கிழக்கில் சுற்றுலா மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுச் செலவிடப்பட்ட தொகைகள் மற்றும் தொல்பொருள் தளங்களுக்குச் செலவிடப்பட்ட நிதி குறித்த விவரங்களை அவர் கோரினார்.

சுற்றுலாத் தங்குமிட நிறுவனங்களின் பதிவு நிலை, அறைக்கொள்ளளவு, சுற்றுலா மேம்பாட்டு வரிச் செலுத்துகை மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பு போன்ற விடயங்கள் குறித்து அரசு தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

சுற்றுலா அபிவிருத்தியின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதம் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாமையால், ஹோட்டல்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியைப் பிரதேச சபைகளுக்குச் செலுத்தவில்லை எனவும், இது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு ஊடாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துகளுக்குப் பதிலளித்த வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், “ஆயுபோவன் என்று குறிப்பிடுவதைப் போன்று வணக்கம் என்று குறிப்பிடுவதும் நல்லதே.
அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

குறித்த இடங்களில் ‘வணக்கம்’ என்று குறிப்பிடுமாறு நாம் அறிவுறுத்துவோம். காலை வணக்கம், மாலை வணக்கம் என்று வரவேற்பது நல்லதே, எனக்கும் அதுவே விருப்பம்” என்று தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை