திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தமிழக அரசு எதிர்ப்பு – மறுசீராய்வு மனு தாக்கல்
முருக்கனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணையத்தின் மூலமாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த சீராய்வு மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 24 ஆம் திகதி கார்த்திகை தீபம் அன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்நிகழ்விற்கு தமிழக அரசு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் மத்திய அரசின் பாதுகாப்பை பெறலாம் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.




