உலகம்

கப்பல்களில் மின்காந்த ஏவுதல் அமைப்பிற்கு மாறாக பாரம்பரிய நீராவி விசைக்கு மாற ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்கக் கடற்படை தனது மேம்பட்ட மின்காந்த ஏவுதல் அமைப்பைக் கைவிட்டு பாரம்பரிய அமைப்பை பின்பற்ற வேண்டும் என ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது பாரம்பரிய முறையான நீராவி விசை உந்துவிசைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய யுஎஸ்எஸ் டோரிஸ் மில்லரில் USS Doris Miller தொடங்கி, இந்தத் தொழில்நுட்பத்தை அகற்றுவதற்கான திட்டங்களை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பென்டகனும் கடற்படையும் வலியுறுத்துகின்றன.

எவ்வாறாயினும் இந்த அமைப்பைத் தயாரிக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனம், கப்பலின் விசை உந்துவிசைகள் மீதான பணிகள் பாதியளவு முடிந்துவிட்டதாகவும், இந்த மாற்றத்தைச் செய்வது பெரும் அபாயங்களையும் செலவுகளையும் ஏற்படுத்தும் எனக் கூறுகின்றன.

இதன் காரணமாக உத்தரவை மறுப்பரிசீலினை செய்யுமாறும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் கடற்படையில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், நீராவி விசை உந்துவிசைகளுக்குத் திரும்புவதால் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகும் மற்றும் அவற்றை இயக்க கணிசமாக அதிக மாலுமிகள் தேவைப்படுவார்கள் எனவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்